News
மோட்டார் சைக்கிள் ஒட்டிய சிறுவன் – 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கேட்ட கிண்ணியா பொலிஸ் அதிகாரி லஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது.

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியொருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது சிறுவன் மீது வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்க்கவே 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விஷயம் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு தெரிவித்ததையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்



