வரலாற்றில் ஒரு முன்மாதிரி ஆரம்பம்… ஊருக்குள் காப்பட் வீதி அமைக்கும் திட்டத்திற்கான செலவு மதிப்பீடு ஊர் மக்களுக்கு (மூன்று மொழிகளிலும்) பகிரங்கமாக காட்சிப் படுத்தப்பட்டது

ஹோமாகம பிரதேச சபையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு செலவு மதிப்பீடு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என தீர்மானம்
ஹோமாகம பிரதேச சபையின் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் போது, அந்தத் திட்டங்களுக்கு செலவாகும் தொகையை வெளிப்படுத்தும் மதிப்பீட்டை, திட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றி பகிரங்கமாக காட்சிப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் கீழ், ஓமாகம, பாலகம, தேருக்குன்ன பாதையை காபெட் வீதி போட்டு அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கு செலவாகும் தொகையை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவதற்கு சமீபத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இவ்வாறு மதிப்பீட்டை பகிரங்கப்படுத்தி, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டமைக்கு பிரதேசவாசிகளின் பாராட்டு கிடைத்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், எதிர்காலத்தில் மும்மொழிகளிலும் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) மதிப்பீடுகளை திட்டம் நடைபெறும் இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வளர்ச்சித் திட்டம் முடிவடைந்த பின்னர், பகிரங்கப்படுத்தப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றி, அதற்கு செலவான தொகையையும் அந்தத் திட்டத்திற்கு மீளப் பயன்படுத்துவதற்கு ஓமாகம பிரதேச சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







