News

குடிசைக் கைத்தொழில் போல் நீண்டகாலமாக வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்றுவந்த நபர் ஏராளமான பொருட்களுடன் பொலிஸாரால் கைது

சுதுமலை பகுதியில் நீண்டகாலமாக வீட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கோப்பாய் – ஊரெழு பகுதியில் 40 லீட்டர் கசிப்புடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலங்களுக்கு அமைவாக மானிப்பாய் – சுதுமலை பிரதேசத்தில் நீண்ட நாட்களாக வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தி செய்து வந்த 36 வயதுடையே ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.



கோப்பாய் பொலிஸாரும் கோப்பாய் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து இந்த நபரை கைதுசெய்துள்ளார்கள். இதன்போது 600 லீட்டர் கோடா, 60 லீட்டர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் என்பன கோபாய் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.



குற்றப்பிரதேசமானது மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி என்பதால், சந்தேகநபர் சான்றுப் பொருட்களுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



பு.கஜிந்தன்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button