News

கொலைச் சம்பவங்களுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயன்படுத்த கூடிய பேனா துப்பாக்கி மற்றும் அதன் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பாணந்துறை ஹொரேதுடுவ பாலத்திற்கு அருகில் வைத்து சந்தேக நபரை சோதனையிட்ட போது கால் சட்டைப் பையில் இருந்து வெளிநாட்டில் பயன்படுத்தக்கூடிய பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் மூன்று ரவைகள், மற்றும் குறித்த துப்பாக்கிக்கான கொள்கலன் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கொலைச் சம்பவங்களுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயன்படுத்த கூடியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button