News
சஜித்தின் வெற்றிக்காக பாடுபடப்போவதாக ஹக்கீம் மஹியங்கனையில் முழக்கம் ..
சஜித்தின் வெற்றிக்காக இம்முறை பாடுபடப்போவதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மஹியங்கனையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று மஹியங்கனையில் இடம்பெற்றது இதன்போது உரையாற்றிய அவர் அம்பாறை , மட்டக்களப்பு , திருகோணமலை மட்டுமல்லாமல் அதனை அண்டிய சிங்கள பகுதிகள் உள்ளிட்ட மூலை முடுக்கு எல்லாவற்றிற்கும் சென்று சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு சேகரிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் முஸ்லிம் வாக்குகளோடு நின்றுவிடாமல் தமிழ் சிங்கள வாக்குகளையும் பெற்றுக்கொள்ள உழைக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.