News

பல்லாண்டு விஞ்ஞான – தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஈரான் அழித்துவிட்டது என இஸ்ரேல் விஞ்ஞானிகள் கதறல் – சத்தம் இல்லாமல் ஈரானின் செய்கையால் இஸ்ரேலின் மூளை சிதைக்கப்பட்டு விட்டதாக தகவல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்… ஈரானின் அணு ஆயுத மையம் தகர்ப்பு… ஈரானின் விமான தளங்கள் தகர்ப்பு… இப்படித் தான் அதிகம் அதிகம் செய்திகளை கேள்விப்பட்டு வருகிறோம்.
ஆனால் சத்தம் இல்லாமல் ஈரான் செய்த ஒரு காரியம், இஸ்ரேலின் ஒட்டுமொத்த அதிகார மையத்தையும் அதிர வைத்துள்ளது.



இஸ்ரேலின் மூளை சிதைக்கப்பட்டு விட்டதாக அலறுகின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.
அது தான் இஸ்ரேலின் முதல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான Weizmann ஆய்வுக்கூடம் மீதான தாக்குதல் ஆகும். இது ஏற்படுத்திய விளைவுகள் இஸ்ரேலை பல ஆண்டுகள் அறிவியல் ஆய்வில் பின்னுக்குத் தள்ளியுள்ளதாக செய்திகள்  தெரிவிக்கின்றன. ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Weizmann ஆய்வுக்கூடம் என்பது பிரிட்டன் மேன்டேட் பாலஸ்தீனத்தில், 1934ஆம் ஆண்டு, Chaim Weizmann என்ற யூதரால் தொடங்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்யூட்டரை இந்த நிறுவனம் தான் உருவாக்கியது.

இதன் நிறுவனர் Chaim Weizmann, பிரிட்டன் அமைச்சர் பால்போரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இஸ்ரேல் உருவாக காரணமாக இருந்தவர்.



பின்னாட்களில் இஸ்ரேலின் ஜனாதிபதியாகவும் தேர்வு செய்யப்பட்டார். தற்போது, இஸ்ரேல் ராணுவம் மற்றும் மொசாத் அமைப்பின் தேவைகளுக்கு தகுந்த அனைத்து கண்டுபிடிப்புகளையும் இந்த அறிவியல் அமைப்பு தான் உருவாக்கிக் கொடுத்து வருகிறது.
தற்போது, இந்த அறிவியல் ஆராய்ச்சி மையத்தை குறிவைத்துத் தான் ஈரான் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த மையத்தில் உள்ள ஒரே ஒரு ஆய்வகம் மட்டுமே தாக்கப்பட்டதாக இஸ்ரேல் செய்தி வெளியிட்ட நிலையில், தற்போது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஊடகமான ஹாரெட்ஸ் குழுமத்தால் வெளியிடப்படும் தினசரி வணிக செய்தித்தாள் தி மார்க்கர்” தொடர்ந்து கூடுதல் செய்திகளை வெளியிட்டுள்ளது. அதில், அந்த அறிவியல் மையத்தின் பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஒரு முக்கிய ஆய்வகம் முற்றிலுமாக தீக்கிரையாகி உள்ளது.

உயிரியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆகியவற்றில் மேம்பட்ட ஆராய்ச்சி தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்கள் இஸ்ரேலின் ராணுவத்துக்கு அதிகம் பயன்பட்டு வந்தவை என கூறப்படுகிறது. “இஸ்ரேலின்” “அறிவியல் மற்றும் இராணுவ மூளை” சிதைக்கப்பட்டுள்ளதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் அலறியுள்ளன.

வான்வழித் தாக்குதல் ஒருங்கிணைப்பு அமைப்புகள், ட்ரோன் போர் திறன்கள் மற்றும் போர்க்கள மருத்துவ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வந்தது.
இவை அனைத்தும் காசா, லெபனான், ஏமன் மற்றும் சமீபத்தில் ஈரானில் பொதுமக்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளன.

அழிக்கப்பட்ட ஆய்வகங்களில் ஒன்று, மூலக்கூறு செல் உயிரியல் துறையில் அனுபவம் வாய்ந்த இஸ்ரேலிய பேராசிரியர் எல்டாட் ட்சாஹோர் என்பவரால் நடத்தப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் நேரடியாகத் தாக்கப்பட்ட இஸ்ரேலிய பேராசிரியர் எரான் செகல், தண்ணீர் மற்றும் கட்டமைப்பு சேதம் காரணமாக மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள உபகரணங்கள் மீட்க முடியாத அளவுக்கு சேதமடைந்ததாகக் குறிப்பிட்டார்.

போர்க்கள முடிவெடுப்பதிலும் நிகழ்நேர கண்காணிப்பிலும் பயன்படுத்தப்படும் வழிமுறை அமைப்புகளுக்கு சேகலின் ஆய்வகம் பங்களித்ததாகக் கூறப்படுகிறது, இந்த கருவிகள் காசா மற்றும் பிற இடங்களில் இஸ்ரேலிய நிறுவனத்தின் தாக்குதல்களுக்கு உதவிய கருவிகளாகும்.
இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்கள், எரிந்த உட்புறங்கள், இடிந்து விழுந்த ஆய்வகத் தளங்கள், சேதமடைந்த மின் அமைப்புகள் மற்றும் கட்டமைப்பு அழிவைக் காட்டியுள்ளன. இது துல்லியமான தாக்குதலின் விளைவாகும் என்று ராணுவ வட்டாரங்கள் விவரித்துள்ளன.

இஸ்ரேலிய அதிகாரிகள் தாக்கங்களை குறைத்து மதிப்பிட்டாலும், தி மார்க்கர் இந்த தாக்குதல் “தற்செயலானது அல்ல” என்று ஒப்புக்கொண்டுள்ளது.
ஈரானின் அணு விஞ்ஞானிகளின் படுகொலைக்கு நேரடி பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை ஊடக அறிக்கைகள் வர்ணித்துள்ளன. அப்பாவி காசா, லெபனான், ஏமன், ஈரான் பெண்கள், குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த நிறுவனம் நேரடியாக உதவியுள்ளதால், ஈரானின் இந்தத் தாக்குதல் சட்ட உரிமை உடையதாக உள்ளது என ஈரான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இஸ்ரேலிய பேராசிரியர் ஷரல் ஃப்ளீஷ்மேன், கூறும் போது, இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவை என்பதை ஒப்புக்கொண்டார். “உயிர் அறிவியல் ஆய்வகங்கள் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் பொருட்களை நம்பியுள்ளன. ஒரு ஆய்வகம் அழிக்கப்படும்போது, அதனுடன் அனைத்து பொருட்களும் அழிக்கப்படும்போது, அது ஈடுசெய்ய முடியாதது,” என்று அவர் கூறினார்.

மற்றொரு இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ஓரன் ஷுல்டினர், தி மார்க்கரிடம் கூறும் போது, “ஆய்வகம் காற்றில் ஆவியாகிவிட்டது போல் உள்ளது.” பாதிக்கப்பட்ட ஆய்வகங்களையும் அவற்றின் திறன்களையும் மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று ஷுல்டினர் குறிப்பிட்டார்.

அறிவியல் ஆராய்ச்சி மையம் என்ற போர்வையில், போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த இந்த மையத்தை, 2000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து, பல கட்ட வான் பாதுகாப்புகளை முறியடித்து, ஈரான் மிசல்ஸ்கள் தாக்கிய சம்பவம், உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி Q7tv

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button