News

ஈரான் எங்கள் நாட்டில் பொதுமக்களுக்கு  உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொத்து குண்டுகளை போடுகிறது என இஸ்ரேல் குற்றம் சாட்டியது

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் தங்கள் எல்லையில் கொத்து குண்டுகளை (Cluster bombs) ஏவுவதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.





பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.





இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் ஏவிய ஏவுகணையின் போர்முனை சுமார் 7 கிலோமீற்றர் (4 மைல்) உயரத்தில் உடைந்து, மத்திய இஸ்ரேலிய பிரதேசத்தில் சுமார் 8 கிலோமீற்றர் (5 மைல்) சுற்றளவில் சுமார் 20 சிறிய குண்டுகளாக வெடித்து சிதறடித்தது.







சிறிய குண்டுகளில் ஒன்று மத்திய இஸ்ரேலில் உள்ள அசோர் நகரில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கி சேதம் ஏற்படுத்தியதாக த டைம்ஸ் ஒப் இஸ்ரேலின் இராணுவ நிருபர் இம்மானுவேல் பேபியன் தெரிவித்தார். இருப்பினும், உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.







வெடிக்காத குண்டுகளின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் ஒரு கிரபிக் வீடியோவையும் இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button