News

இன்று சியோனிஸ்ட் ஆட்சியின் கீழ் வடக்கு முதல் தெற்கு வரை உள்ள முக்கிய இலக்குகளை multiple-warhead கைபர் என்ற மிகவும் துல்லியமாக, அதிக அழிவுகளை ஏற்படுத்தும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்கினோம் என ஈரான் இராணுவம் அறிவித்தது.

ஈரான் புரட்சிப் படை புதிய multiple-warhead Khyber ஏவுகணையை இஸ்ரேலுக்கு எதிராக அறிமுகப்படுத்தியது.


இஸ்ரேலுக்கு எதிரான சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலின்போது, ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படை (IRGC) முதல் முறையாக கைபர் (கதர் எச்) “multiple -வார் ஹெட் பாலிஸ்டிக் ஏவுகணை”யை ஏவியதாக அறிவித்துள்ளது.


இந்தத் தாக்குதல், “சியோனிஸ்ட் ஆட்சியின் தொடர்ச்சியான தீய செயல்களுக்கு” பதிலடியாக நடத்தப்பட்டதாகவும், இதில் “ஸ்மார்ட் ட்ரோன்கள்” இணைந்து பயன்படுத்தப்பட்டதாகவும் ஈரானிய செய்தி நிறுவனமான IRNA, புரட்சிப் படையின் மக்கள் தொடர்பு துறையை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.


“இந்த நடவடிக்கையில், கைபர் multiple-warhead Khyber பாலிஸ்டிக் ஏவுகணை முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. புதிய மற்றும் ஆச்சரியமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, மிகவும் துல்லியமாக, அதிக அழிவு விளைவுடனும், மிகவும் திறம்படவும் தாக்குதல் நடத்தப்பட்டது,” என்று ஈரான் இராணுவ அறிக்கை தெரிவிப்பு


“வடக்கு முதல் தெற்கு வரை மற்றும் சியோனிஸ்ட் ஆட்சியின் மையத்தில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய இலக்குகள்” தாக்கப்பட்டதாக IRNA தெரிவித்தது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button