காசாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ( தா*க்குதல்) இஸ்ரேலிய பொறியியல் பட்டாலியன் படையினர் 7 பேர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேலிய படையினர் 7 பேர் உயிரிழப்பு: ஒரே நாளில் பெரும் இழப்பு
காசாவின் தெற்கு பகுதியான கான் யூனிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த வெடிப்பு ஒன்றைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவத்தைச் சேர்ந்த 7 படையினர் உயிரிழந்தனர்.
இது இந்த ஆண்டு காசாவில் நடந்த மிக மோசமான ஒற்றைச் சம்பவங்களில் ஒன்றாகும் என்று தி ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம், உயிரிழந்த ஆறு படையினரின் பெயர்களை வெளியிட்டுள்ளது. ஏழாவது படையினரின் பெயர், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படும் வரை வெளியிடப்படவில்லை.
மேலும், அதே 605வது போர் பொறியியல் பட்டாலியனைச் சேர்ந்த மற்றொரு படையினர், காசாவின் தெற்கு பகுதியில் நடந்த வேறு ஒரு சம்பவத்தில் பலத்த காயமடைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 2024இல், ஒரே நாளில் காசாவில் குறைந்தது 24 இஸ்ரேலிய படையினர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



