News

முன்னாள் சுகாதார அமைச்சின் (அமைச்சர் கெஹெலியவின்) செயலாளர் இன்று காலை கைது

முன்னாள் சுகாதார அமைச்சு செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இன்று காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர் காவலில் எடுக்கப்பட்டார்.

2023ஆம் ஆண்டு, தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக ஜனக ஸ்ரீ சந்திரகுப்த முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனும் தொடர்புடையது.

தற்போதைய கைதுக்கான காரணம் இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button