News

கடந்த ஐந்தே மாதங்களில் 31 அரச அதிகாரிகள் லஞ்சம் எடுத்து கையும் களவுமாக சிக்கி உள்ளனர் – இதில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள்.

நடப்பாண்டில் ஐந்து மாதங்களில் இலஞ்ச ஊழல் தொடர்பாக பல்வேறு நிலைகளைச் சேர்ந்த 31 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



கைது செய்யப்பட்ட 31 பேர்களில் எட்டு பேர் பொலிஸ் அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸ் பரிசோதகர், பிரதி பொலிஸ் பரிசோதகர், நான்கு பொலிஸ் சார்ஜென்ட்கள், இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு பாடசாலை அதிபர் மற்றும் இரண்டு பொது சுகாதார ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button