News

பேருவளை நகர சபையில் NPPக்கும் SJBக்கும் கல்யாணம் ?

எந்தவொரு கட்சியும் 50 சதவிகிதம் வாக்குகள் எடுக்காத பேருவளை நகர சபையில் ஆளும் தரப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றி பெற்ற நகர சபை உறுப்பினர் மஸாஹிம் மொஹமட் வலியுருத்தியுள்ளார்.

நேற்றுமுன் தினம் பேருவளையில் இடம்பெற்ற கட்சி ஆதாரவாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை வலியிருத்தியுள்ளார்.

ஆளும் தரப்போடு இணைந்து பயணிப்பதால் பேருவள நகர சபையில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என கூறியுள்ள அவர் எதிர்க்கட்சியில் அமர்வதால் பயணில்லை

என கூறியுள்ளார்.

பேருவளை நகர சபையில் சுயாதீன குழு 7 உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

கடந்த 18 ம் திகதி நடைபெற இருந்த அமர்வு நீதிமன்ற உத்தரவை அடுத்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றி பெற்ற நகர சபை உறுப்பினர் மஸாஹிம் மொஹமட் ஆளும் தரப்போடு இணைந்து பயணிப்பது பற்றி கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Recent Articles

Back to top button