News
விநியோகிக்க தயாராக வீட்டில் வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றினர்.

வத்தளை, பள்ளியாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 39 கிலோ கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சோதனை நடத்தப்பட்ட நேரத்தில் இந்த போதைப்பொருட்கள் விநியோகிக்க தயாராக இருந்ததாகவும், சோதனையின் போது 6 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.



