News

எலான் மஸ்க் மீண்டும் (சொந்த நாடான) தென் ஆப்பிரிக்காவிற்கே செல்ல வேண்டியிருக்கும் என ட்ரம்ப் எச்சரிக்கை.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.



இதற்கிடையே இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து புதிய கட்சியை தொடங்குவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.



இந்நிலையில், எலான் மஸ்க் மீண்டும் தென் ஆப்பிரிக்காவிற்கே செல்ல வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



இது குறித்து ட்ரம்ப் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது , ”  ஜனாதிபதி தேர்தலில் எலான் மஸ்க் என்னை தீவிரமாக ஆதரித்தார்.

ஆனால் EV வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை இரத்து செய்ய வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக நான் கூறி வருகிறேன். இது எலான் மஸ்க்கிற்கும் தெரியும்.


வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான்.

சலுகைகள் மட்டும் இல்லையென்றால் எலான் மஸ்க்  தென்னாபிரிக்காவுக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button