News
டிரம்பின் அதிரடி முடிவால் 2030 ஆண்டாகும் போது உலக நாடுகளில் ஒரு கோடி நாற்பது லட்சம் பேர் உயிரிழப்பார்கள் !

அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி முடிவால் 2030 ஆண்டாகும் போது உலக நாடுகளில் ஒரு கோடி நாற்பது லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என அண்மைய அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாக ஸ்பெயினில் இடம்பெற்ற ஐ நா உதவி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் உலக நாடுகளுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்துவதாக அறிவித்த நிலையில் இந்த முடிவால் மூன்றாம் உலக நாடுகள் வெகுவாக பாதிக்கப்படும் என 130 நாடுகளின் தரவுகளை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021-2023 காலப்பகுதியில் அமெரிக்க உதவிகளால் 91 மில்லியன் மக்கள் நன்மையடைத்ததாக அந்த தரவுக்குகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி முடிவால் 2030 ஆண்டாகும் போது உலக நாடுகளில் ஒரு கோடி நாற்பது லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.



