News

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சி வரலாற்றில் முதல் இளம் பிரதித் தவிசாளராக
பாறுக் நஜி  தெரிவு.



கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நேற்று (02.07.2025) அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன.

இதில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக ஏ.எஸ்.எம்.உவைஸ் தவிசாளராகவும், பிரதித் தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் பாறுக் நஜித் அவர்ளும் தெரிவு செய்யப்பட்டனர்.

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர் உட்பட  ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினரும்  ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தவிசாளர் தெரிவிற்கு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏ.எஸ்.எம்.உவைஸ், தேசிய மக்கள் சக்தி சார்பாக எஸ்.பாஹிமா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் ஏ.எஸ்.எம்.உவைஸ் 11 வாக்குகளும், எஸ்.பாஹிமாவுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. இதில் உவைஸ் 08 மேலதிக வாக்குகளினால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் நடு நிலை வகித்தனர்.

பிரதித் தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் பாறுக் நஜித் சபையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button