News

வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்புக்கு RCB அணியே காரணம்;  நீதிமன்றம்

முதல் முறையாக ஐ.பி.எல் சம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியின் கடந்த ஜூன் 4ஆம் திகதி நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்புக்கு அவ்வணியே காரணம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



குறித்த விவகாரத்தில், போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக ஐந்து உயர் அதிகாரிகளை முதல்வர் சித்தராமையா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் ஆணையர் விகாஷ் குமார் மனு அளித்திருந்தார்.



மனுவை விசாரித்த நீதிமன்றம் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆர்சிபியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், விகாஷ் குமாரின் இடைநீக்கத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.



ஆர்.சி.பி அணி திடீரென்று சமூக ஊடகங்களில் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டதால், பொதுமக்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தில் ஒன்று கூடினர்.



சம்பவ தினமன்று நேர பற்றாக்குறை இருந்ததால், உரிய ஏற்பாடுகளைச் செய்ய போதுமான நேரம் வழங்கப்படவில்லை. ஆர்.சி.பி அணி எந்த முன் அனுமதியும் இல்லாமல் இந்த விடயத்தைச் செய்துள்ளது.



பாதுகாப்பு ஊழியர்களும் மனிதர்கள் தான்;. அவர்கள் கடவுள் அல்ல, மந்திரவாதியும் அல்ல. மேலும் ஒரு விரலை தேய்த்தால் மட்டுமே விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய அலாவுதீன் போன்ற மந்திர சக்திகளும் அவர்களிடம் இல்லை,’ என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button