News

கண்டி – வத்தேகம டிப்போவைச் சேர்ந்த இ.போ.ச பஸ் விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயம்

வத்தேகம டிப்போவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து ஒன்று இன்று (03/07/2025) ஆரலிய உயன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குடுகலவில் இருந்து வத்தேகம ஊடாக கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்த பேருந்து, பாதையை விட்டு விலகி வீடு ஒன்றுக்கு அருகில் கவிழ்ந்ததில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் எட்டு பேர் வத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலுள்ள கதவு திடீரென திறந்ததாகவும், அதைப் பிடிக்க முயன்ற ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து பள்ளம்  நோக்கி சென்று கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நேரத்தில் பேருந்தில் 25 பயணிகள் இருந்ததாகவும், காயமடைந்தவர்களில் எவரும் பாரதூரமான நிலையில் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button