கல்விப் பணியில் 75 ஆண்டுகளாக மிளிரும் கம்பளை அல்-ஹிக்மாவில் முப்பெரு விழா..

கம்பளை நகரில் இயற்கை அழகும் மகாவலியின் சாரலும் இனிதாக வீசும் ஆண்டியாகடவத்தை பிரதேசத்திலுள்ள
க/ அல்- ஹிக்மா மகா வித்தியாலயத்தின் “முப்பெரு விழா” நிகழ்வுகள் கடந்த 19.06.2025 அன்று கம்பளை தி.மு.ஜயரத்தன மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
அதிபர் MH நுஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாடசாலை உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவைடைவதை சிறப்பித்து “நினைவுச் சின்னம்” வெளியிடப்பட்டது.
அத்துடன் கடந்த வருடம் கல்வி அடைவுகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கம்பளை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி PMN பேகம் அவர்களும் சிறப்பு அதிதியாக கம்பளை வர்த்தகச் சங்கத் தலைவர் அல்ஹாஜ் ஹம்ஸா அவர்களும் கலந்து கொண்டார்.
75 வருடங்களைக் கடந்து கல்விப் பணி புரியும் ஆண்டியாகடவத்தை அல்- ஹிக்மா மகா வித்தியால வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பதிய வேண்டிய இவ்விழாவில் விசேட அதிதிகள் மற்றும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அட்டாளை நிஸ்றி
ஆசிரியர்.



