சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சின் ஊடாக கிண்ணியாவில் ஒரு சிறந்த முயற்சி – அங்கவீனமுற்ற நபர்களுக்க்கு சகல வசதிகளுடன் கூடிய பகல் நேர நிலையம் ஒன்று அமைக்கப்படுகிறது .

ஹஸ்பர் ஏ.எச்_
சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான பகல் நேர நிலையம் ஒன்றை அமைப்பதற்கான கள விஜயம் ஒன்று நேற்று (20) மாலை இடம் பெற்றது. கிண்ணியா பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றும் பிரதேச செயலாளர் மற்றும் பணிப்பாளருக்குமிடையில் இடம் பெற்றது.
குறித்த பகல் நேர நிலையமானது கிண்ணியா நடுவூற்று பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் அமைக்கப்படவுள்ளது. சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி தர்சணி கருணாரட்ண தலைமையிலான குழுவினர் உட்பட கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனி ஆகியோரும் குறித்த நிலையம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டனர்.
கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக குறித்த நிலையத்தின் நடவடிக்கைகள் இடம் பெறவுள்ளது. இதன் மூலம் கிண்ணியா பிரதேச செயலக பகுதி,தம்பலகாமம், மூதூர்,பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலக பகுதிகளை சேர்ந்த பல்வேறு பட்ட அங்கவீனமுற்ற நபர்களை சேர்ந்தவர்கள் பயனடைவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சகல வசதிகளுடனும் கூடிய வகையில் இக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
இதில் திருகோணமலை மாவட்ட செயலக பொறியியலாளர்,கிண்ணியா பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

