News

சிறியரக  கிரேன் வாகனம், நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம் #கொழும்பு, பொரளை

கொழும்பு பொரளை கணத்தை ரவுண்டபோட்டில் பல வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்

கொழும்பு, பொரளை கனத்தைக்கு அருகே இன்று (28) காலை இடம்பெற்ற பல வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் தகவலின்படி, ஒரு சிறிய கிரேன் வாகனம், நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில், ஆத்துருகிரியவைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் படுகாயம் காரணமாக உயிரிழந்தார்.பொலிஸ் விசாரணைகளில், கிரேன் வாகனத்தின் பிரேக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கிரேன் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை போரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button