News

இலங்கை கால்பந்து வீரர் முகமது தில்ஹாமுக்கு 2,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் !

ஜூன் 10 அன்று கொழும்பு ரேஸ்கோர்ஸில் இலங்கைக்கும் சீன தைபேக்கும் இடையிலான ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற பிறகு, இலங்கை கால்பந்து வீரர் முகமது தில்ஹாம் தனது டி-சர்ட்டில் பாலஸ்தீனத்தை ஆதரித்து எழுதப்பட்ட வாசகத்தைக் காட்டினார்.

தில்ஹாமின் நடவடிக்கைகள் வீரர்களுக்கான நடத்தை விதிகளின் ஒரு விதியை மீறியுள்ளதாக FIFA ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் இலங்கை கால்பந்து கூட்டமைப்புக்கு தெரிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்து போட்டியின் போது அல்லது அது தொடர்பான எந்தவொரு நிகழ்விலும் அரசியல், மதம் அல்லது தனிப்பட்ட வாசகங்களை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் காட்சிப்படுத்துவதை FIFA தடை செய்துள்ளது.

அதன்படி, இந்த குற்றத்திற்காக இலங்கை கால்பந்து வீரர் முகமது தில்ஹாமுக்கு 2,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Recent Articles

Back to top button