பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னக்கோன் பேஸ்புக் புரோபைல் படத்தையும் மாற்றினார்.

Muhammadu Siyam – உயர்நீதிமன்றத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னக்கோன் நேற்று இரவு தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பொலிஸ் சீருடை இருந்த படத்தை நீக்கிவிட்டு,
அதற்கு பதிலாக “டை -கோட்” அணிந்திருந்த புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக தனது பேஸ்புக் கணக்கில் தனிப்பட்ட தகவல்களின் கீழ் இருந்த பதவி நிலைகளின் விவரங்கள் அனைத்தையும் அவர் நீக்கியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் சுமார் 6 மாதங்களாக முடங்கி கிடந்த அவரது பேஸ்புக் கணக்கு
நேற்று இரவு முதல் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
அதேபோன்று தென்னகோன் காணாமல் போனதாக கூறபட்ட காலகட்டத்திலும் அவரது பேஸ்புக் கணக்கு ஆக்டிவாக இருக்கவில்லை.
உயர் பதவியில் இருந்து கொண்டு Deep state என்னும் பாதாள உலகத்தை இயக்கி வந்த பொலிஸ் மா அதிபர் என்ற குற்றச் சாட்டுடன் பதவியும் போனது.
ஒரு துளி கூட பொருத்தமில்லாத தேசபந்துவை சமூகத்தின் உயர் பதவி ஒன்றில் அமர்த்தி அழகு பார்த்த முழு கிரெடிட்டும் ரணிலை சாரும்.
ஆனால் நேற்று நடந்த வாக்கெடுப்பில் மொட்டு கட்சி தேசபந்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க,
அடுத்து வரும் ஆட்சி ஒன்றில் தேசபந்து பொலிஸ் மா அதிபர் பதவியில் வந்து அமராத வரை சந்தோஷம்.

