News

இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது விபரம்

——————–

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, செவனகல கிரியிப்பன் வெவ பகுதியில் உள்ள காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் உட்பட பல சொத்துக்கள் 09.05.2022 அன்று நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்தன. 

மேற்படி சொத்துக்கான இழப்பீட்டின் போது, அந்த காணி இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என அடையாளப்படுத்தப்பட்டதால் இழப்பீடு மறுக்கப்பட்ட போதிலும், அதற்கு மாறாக, இழப்பீட்டு அலுவலகத்தில் இணைக்கப்பட்ட சில அரசு அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்ததாக சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த இழப்பீட்டை பெற்றதன் மூலம் ஊழல் செய்தல் மற்றும் சதி செய்தலுடன், இந்த சொத்துக்கள் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என்பதால், மகாவலி அதிகாரசபையின் சொத்துக்கள் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

கைதான சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button