News

ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வெளியாகும் பதிவுகள் தொடர்பில் சட்டத்தரணி அகலங்க உக்வத்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம், சட்டத்தரணி அகலங்க உக்வத்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பதிவுகள், ஜனாதிபதியின் நற்பெயர் மற்றும் குணத்திற்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், தவறான வழியில், அவதூறான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக, முறைப்பாட்டை அளித்த சட்டத்தரணி கூறியுள்ளார்.

அதற்கமையை, குறித்த பதிவுகளுக்குப் பொறுப்பான சமூக ஊடகக் கணக்குகளைச் செயற்படுத்துபவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தப் பதிவுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதுடன், சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் எனச் சட்டத்தரணி அகலங்க உக்வத்தே தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button