காஸாவை இஸ்ரேல் கைப்பற்றுவதற்கு எடுத்த தீர்மானம் குறித்து இலங்கை அரசு ஆழ்ந்த கவலை தெரிவித்தது.

காஸாவை இஸ்ரேல் கைப்பற்றுவதற்கு எடுத்த முடிவு குறித்து இலங்கை அரசு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை வன்முறையை மேலும் தீவிரப்படுத்தி, பாலஸ்தீன மக்களின் துயரத்தை மோசமாக்கும் என இலங்கை எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, வெள்ளிக்கிழமை காசா நகரை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை அங்கீகரித்தது. இதனைத் தொடர்ந்து, போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கப்பட்டுள்ளன.
இந்த முடிவு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்து, நிலையான அமைதியை அடைய வேண்டும் என இலங்கை வலியுறுத்தியுள்ளது.


