மனிதப் பேரழிவாக உருவெடுத்து வரும் பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அதிகாரப் போரை தடுப்பதற்கு அஹிம்சை மாத்திரமே ஒரே வழி

(எம்.மனோசித்ரா)
பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அதிகாரப் போர் தற்போது மனித பேரழிவாக உருவெடுத்து வருகிறது. இந்தப் பேரழிவை தடுப்பதற்கு அஹிம்சை மாத்திரமே ஒரே வழியாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காசாவை இஸ்ரேல் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது தொடர்பான பிரதமர் பெஞ்சமின்னின் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் செய்துள்ள பதிவிலேயே எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யாருடைய வரலாறு அதிக பலம் கொண்டது என்பது பற்றிய விவாதத்துக்கு அப்பால், இது ஒரு மனித பேரழிவாக மாறிவிட்டது.
இந்தப் பேரழிவைத் தடுப்பதற்கு அகிம்சை மட்டுமே ஒரே வழி, வேறு வழியில்லை. பிரதேசம் அல்லது வளங்களை வெல்வதை விட, நமது மனிதநேயத்தை இழப்பது குறித்து நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். நாம் அதை இழந்தால், எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

