News

கல்விக்கு வயது ஒரு தடையல்ல… 48 ஆவது வயதில் ஷரீஆ கற்கை நெறியை நிறைவு செய்து அல் ஆலிம் பட்டம் பெற்ற கிண்ணியா சஹீது முஹம்மது இக்ரிமா

இர்ஷாத் இமாமுதீன்
கிண்ணியாவைச் சேர்ந்த அஷ்ஷெய்ஹ் முஹம்மது சஹீது முஹம்மது இக்ரிமா தனது 48 வது வயதில் ஷரீஆ கற்கை நெறியை நிறைவு செய்து அல் ஆலிம் பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

அநூராதபுரத்தின் முதலாவது உருவான அரபுக்கல்லூரியான ஹெட்டுவவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஜமாலியா அரபுக் கல்லூரியின் எட்டாவது பட்டமளிப்பு விழா  ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்றபோதே இவர் பட்டம் பெற்றார்.

கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்  5 ஆண்பிள்ளைகளின் தந்தையான இவர் பகுதி நேரமாகக் கற்று இப்பட்டத்தை பெற்றுள்ளார்.

மகுதூம் லெப்பை முகம்மது சஹீது (முன்னாள்) அதிபர் மற்றும் குலாம் ரசூல் அமிசா உம்மா தம்பதிகளின் பத்து பிள்ளைகளின் எட்டாவது பிள்ளையான இவர் BSc பட்டத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் MSc பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்திலும்  LLB பட்டத்தினை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்து Attorney at Law வை தொடர்ந்து கொண்டிருக்கும் இவர்   பாதுகாப்பு அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான வெடிபொருள் கட்டுப்பாட்டாளராக பணிபுரிகின்றார்.

இவர் கிண்ணியா பட்டதாரிகள் ஒன்றியம் KYGA COD அல் மக்தூம் சிறுவர் செயற்பாட்டுக் கல்லூரி போன்ற பல நிறுவனங்களின் இஸ்தாபகராக இருப்பதுடன் பள்ளிவாசல் , பாடசாலை மற்றும் பல பொது நிறுவனங்களில் தலைவராகவும் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button