இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருகிறது…. அடுத்த ஆண்டுக்குள் வாழ்க்கைச் செலவு, வறுமைக் குறைப்பு, தனிநபர் வருமானம் போன்ற முக்கிய விடயங்களில் உள்ள நெருக்கடிகள் நீங்கும் ; மத்திய வங்கி ஆளுநர்

எதிர்வரும் ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முன்னரான நிலைகளை விஞ்சிவிடும் என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருகிறது.
கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது.
தற்போது அந்த நிலைமை மாறி வருவதாக, சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு, அதிலிருந்து மீள பொதுவாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள், இலங்கையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு, வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற முக்கியத் துறைகளில் இலங்கை நெருக்கடிக்கு முன்னராக நிலைமை அடுத்த ஆண்டுக்குள் கடந்துவிடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.



