News

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்கப்படுவதற்கு எதிராக நான் நீதிமன்றம் செல்ல மாட்டேன் ; ரணில் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க, தனது சலுகைகள் நீக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதில்லை என தனது கட்சி உறுப்பினர்களுக்கு அண்மையில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்கப்படுவது தொடர்பாக மற்ற முன்னாள் ஜனாதிபதிகளுடன் குழுவாக எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அண்மையில் இரண்டு இடங்களில் சந்தித்தபோது, இது தொடர்பாக தன்னுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் ரனில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button