News
இலங்கை- சவுதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு .

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இலங்கை-சவுதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக தெரிவு
பத்தாவது நாடாளுமன்றத்திற்கான இலங்கை -சவுதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை ஸ்தாபிக்கும் கூட்டம், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இலங்கையில் உள்ள சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Alkahtani) மாண்புமிகு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துஷாரி ஜயசிங்க, சங்கத்தின் செயலாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.



