News

அரசாங்கத்தின் முடிவால் விமல் வீரவன்ச – திஸ்ஸ விதாரண- வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 6 கட்சித் தலைவர்களும் 499 முன்னாள் M.P க்களும் , மறைந்த M.P க்களின் 150 மனைவிமாரும் ஓய்வூதியத்தை இழப்பார்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவால், ஆறு கட்சித் தலைவர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இழப்பார்கள் என்று நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, விமல் வீரவன்ச, டி.டபிள்யூ. குணசேகர, திஸ்ஸ விதாரண மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட ஆறு கட்சித் தலைவர்கள் தங்கள் ஓய்வூதியத்தை இழப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமாரும் என 499 பேர் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே கூறுகிறார்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் 150 பேர் ஓய்வூதியம் பெறுவதாக அவர் தெரிவித்தார்.

உலகிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் பறிக்கும் ஒரே நாடு இலங்கையாகும்.

வேறு தொழில்கள் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை பறிப்பது மனித உரிமை மீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஓய்வூதியங்களை ரத்து செய்வதற்கு முன்னர், அரசாங்கத்தை இருமுறை சிந்திக்க வேண்டும் எனவும் பிரேமசிறி மானகே கோரியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button