News
அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் முதலாவது பொதுக்கூட்டம் – இதுபோல் பல பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி திட்டம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் நடைபெற்றது.
மேலும், இதே போன்று நாடளாவிய ரீதியில் 100 பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலரும் இதில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதியின் இந்த கூட்டத்தில அலைகடலென மக்கள் கூட்டம் திரண்டு வந்ததை காணக்கூடியதாக இருந்தது.