News
மொபைல் கவரேஜ் பிரச்சினைக்கு தீர்வு வருகிறது – 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்.

கிராமப்புறங்களில் பலவீனமான தொலைத்தொடர்பு சமிக்ஞை பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், இலங்கை அரசாங்கம் 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தின் கட்டுமான செலவில் 75% இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) ஏற்கப்படும் என அவர் மேலும் கூறினார்.



