News
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இளைஞர் அமைப்பாளராக நாஷிப் மர்ஜான் நியமனம் !

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன களுத்துரை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக நாஷிப் மர்ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் அவர்களின் புதல்வரான நாஷிப் மர்ஜான் களுத்துரை மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் ஒருவராவார்.
தற்போது மாணிக்க வர்த்தகத்தில் ஈடுபடும் நாஷிப் மர்ஜான் கொழும்பு மெல்பர்ன் சர்வதேச பாடசாலையின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.



