ரணில் விக்ரமசிங்க, வழக்கில் இருந்து நிரந்தரமாக விடுபடவும், விரைவாக குணமடையவும் வேண்டி ஆலயங்களில் சிறப்பு பூஜைகள்..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் விரைவாக குணமடைய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த சிறப்பு ஆசீர்வாத பூஜைகள் பெருந்தோட்ட பகுதிகளில் திங்கட்கிழமை (25) அன்று நடைபெற்றது.
மேலும் , பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியாக பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட பயணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டதோடு, அவரின் பாதுகாப்பிற்காக சென்ற மெய் பாதுகாவலர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு, வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த வழக்கில் இருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் பெருந்தோட்ட பகுதிகளில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளதாக இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



