News

கோட்டை நீதிமன்றத்திற்கு அருகில் வீதியில் போராட்டம் நடத்தியவர்கள், ஏற்பாடு செய்தவர்களின் புகைப்படங்கள் மூலம் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க அடையாளம் காணப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவிப்பு

கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்குச் செல்லும் வீதியில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, போராட்டத்தை ஏற்பாடு செய்த நபர்கள் புகைப்படங்கள் மூலம் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க அடையாளம் காணப்பட்டு வருவதாக காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, காவல்துறை மாஅதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிணை பெற இது போன்ற போராட்டம் இதற்கு முன்பு நடத்தப்படவில்லை என்றும் இது போன்ற போராட்டம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் காவல்துறை மாஅதிபர் கூறினார்.

குறிப்பாக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த குழுக்கள் மீது காவல்துறையின் கவனம் செலுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button