News

தலைமறைவாக வாழ்ந்து வந்த முன்னாள் M.P அத்துரலிய ரத்தன தேரர், இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துரலிய ரத்தன தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னதாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அத்துரலிய ரத்தன தேரரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் அக்கட்சி பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலிய ரத்தன தேரர் பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களாக தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button