News
மடவளை பஸார் ஜாமியுல் ஹைராத் ஜும்மா பள்ளி பரிபாலன சபைத் தலைவராக அல் ஹாஜ் நாஜிம் அவர்கள் மீண்டும் தெரிவு

மடவளை பஸார் ஜாமியுல் ஹைராத் ஜும்மா பள்ளி பரிபாலன சபைத் தலைவர் தெரிவு இன்று வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் வக்பு சபையின் கண்கானிப்பின் கீழ் இடம்பெற்றது.
11 ஜமாத்தினரின் பெயர்கள் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதில் 8 பேர் வாபஸ் வாங்கிக் கொண்டனர்.
மிகுதியாக இருந்த அல்ஹாஜ் ஹில்மி, அல்ஹாஜ் முஸ்னி மற்றும் அல்ஹாஜ் நாஜிம் அவர்களில் ஒருவரை தெரிவு செய்ய வக்பு சபையின் கீழ் வாக்களிப்பு நடை பெற்றது.
ஊர் ஜமாத்தினர் 428 பேர் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற ஜனாப் நாஜிம் அவர்கள் மீண்டும் மடவளை பஸார் ஜாமியுல் ஹைராத் ஜும்மா பள்ளி பரிபாலன சபைத் தலைவராக அல் ஹாஜ் நாஜிம் அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.





