News

கெஹெல்பத்தர பத்மே குழுவிடம் நடத்திய விசாரணையில், வீடொன்றில் இருந்து  ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50,000 கிலோகிராம் அளவிலான மூலப்பொருட்கள் மீட்பு

மித்தெனிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் சுமார் 50,000 கிலோகிராம் அளவிலான மூலப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மேல் மாகான குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளன.

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்தக் கைப்பற்றல் நடைபெற்றுள்ளது.

மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹான் ஓலுகல மற்றும் பிரதான காவல் பரிசோதகர் லின்டன் சில்வா ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், தற்போது அந்த இடத்தில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button