News

அயல் வீட்டு நபருடன் இணைந்து ஒற்றுமையாக மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நபர் மதுவின் பின்னரான உளறலால் கைகலப்பாகி தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் #இலங்கை

களுத்துறையில் ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெபெல்லகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த சனிக்கிழமை (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை , கெபெல்லகொட பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று, கொலைசெய்யப்பட்டவர் தனது அயல் வீட்டிற்குச் சென்று அங்கு வசிக்கும் நபருடன் இணைந்து மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான அயல் வீட்டில் வசிக்கும் நபரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button