ஐஸ் விவாகரம்…. மித்தெனிய நகரில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி போதைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – போதைப்பொருளை அழிக்கும் அரசுக்கு பூரண ஆதரவு வழங்குவோம் எனவும் அறிவிப்பு

மித்தெனிய நகரில் இன்று (08) மதியம், நாடு முழுவதும் பரவியுள்ள போதைப்பொருள் தொல்லையை ஒழிக்க கோரி, மிதனியவைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 500 பேர் கலந்து கொண்டனர். மிதனிய பேருந்து நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாடு முழுவதும் பரவியுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க அரசு மிகவும் தீவிரமாக தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். போதைப்பொருளை முற்றாக ஒழிக்க தற்போதைய காவல்துறைத் தலைவரும் தீவிரமாக பங்களிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், போதைப்பொருள் தொடர்புடைய அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். எதிர்கால சந்ததியை அழிக்கும் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஆதரவை வழங்குவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

