துறைமுகத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய இரசாயனங்கள் அடங்கிய கெண்டைனர்கள் NPP அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டதாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பிழையானவை என காவல்துறை அறிவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் ஆய்வுக்காக சிவப்பு முத்திரையுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கொள்கலன்களில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளுடன் தொடர்புடைய இரசாயனங்கள் இருப்பதாகவும், அவை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகள் முற்றிலும் தவறானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பொய்யான தகவல்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹன் ஒலகலவுக்கு சம்பந்தப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் இவ்வாறான எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை ஒன்றை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இந்த பொய்ச் செய்திகளை பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைய தண்டிக்கப்படுவார்கள் என பொலிஸ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

