News

நேபாள ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டின் முன்னாள் பிரதமரின் வீட்டுக்கு தீவைத்ததில் உள்ளே இருந்த அவரின் மனைவி எரிந்து உயிரிழப்பு



காத்மாண்டு: நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கனால் அவர்களின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகர், ஆர்ப்பாட்டக்காரர்களால் அவர்களது வீட்டில் தீ வைத்து எரிக்கப்பட்டதில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களின் மத்தியில், கும்பல் ஒன்று அரசு கட்டடங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களை தாக்கி தீ வைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராஜ்யலட்சுமி சித்ரகரை வீட்டிற்குள் முடக்கி, கும்பல் வீட்டிற்கு தீ வைத்ததாக கபர் ஹப் என்ற நேபாள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கையில், பலத்த தீக்காயங்களுடன் கிர்திபூர் தீக்காய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சித்ரகர், சிகிச்சையின் போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுவரை அவரது மரணம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button