கட்டாரில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் உயிர் பிழைத்தனர், ஆனால் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என ஹமாஸ் இயக்கம் தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது

ஹமாஸ் தலைவர்கள் உயிர் பிழைத்தனர், ஆறு பேர் கொல்லப்பட்டனர்: இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஹமாஸ் கண்டனம்
தோஹாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் இயக்கம் தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு, இந்த தாக்குதல் போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தைகளை தடம்புரளச் செய்யும் நோக்கில் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் இந்த படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பியதாகவும், ஆனால் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்டவர்களில், ஹமாஸின் காசா தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் மகன் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர், மேலும் ஒரு கத்தார் அதிகாரியும் அடங்குவர்.
“இந்த தாக்குதல் மீண்டும் ஆக்கிரமிப்பு சக்திகளின் குற்றத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இது ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்புகளை அழிக்கும் இஸ்ரேலின் விருப்பத்தை காட்டுகிறது,” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

