News

பெண் நாய்களை பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என பிரதேச சபை அறிவித்தது

யாழ்ப்பாணம், நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.

நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண் நாய்களுக்கான கருத்தடை செயற்றிட்டத்தினை நல்லூர் பிரதேச சபை முன்னெடுக்கின்றது.

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 14 நாம் திகதி வரை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் பெண் நாய்களுக் கான இலவச கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

பெண் நாய்களுக்கான குறித்த இலவச கருத்தடை சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் தங்களால் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்குரிய கருத்தடை சிகிச்சையினை பெற்றுக்கொள்ளுமாறும் பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் வீதிகளில் காணப்படும் கட்டாக்காலி பெண்நாய்களினை சமூகநலன் நோக்கில் பிடித்து நல்லூர் பிரதேச சபையின் கருத்தடை சிகிச்சை முகாமில் ஒப்படைப்பவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 வீதம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்யை முகாம் நடைபெறும் இடங்கள்

10.09.2025 புதன்கிழமை

காலை 8.30 முதல் 1.30 மணிவரை திருநெல்வேலி கம்பன் சனசமூக நிலையம்

மாலை 1.30 முதல் 4.15 வரை திருநெல்வேலி பாரதி சனசமூக நிலையம்

11.09.2025 வியாழன்

காலை 8.30 முதல் 1.00 மணி வரை கலைச்சுடர் சனசமூக நிலையம், திருநெல்வேலி மேற்கு

மாலை 1.30 முதல் 4.15 வரை கொக்குவில் பழைய உப அலுவலகம்

12.09.2025 வெள்ளிக்கிழமை

காலை 8.30 முதல் 1.00 மணி வரை கலைமகள் சனசமூக நிலையம், நல்லூர் வடக்கு

மாலை 1.30 முதல் 4.15 வரை பொதுநோக்கு மண்டபம், கல்வியன்காடு

11.09.2025 சனி

காலை 8.30 முதல் 1.00 மணிவரை உதயஒளி சனசமூக நிலையம், அரியாலை கிழக்கு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button