News
அயல்வீடுகளில் வசித்துவந்த இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 29 வயதுடைய அலாவுதீன் ரிஷாத் உயிரிழப்பு #பெரியநீலாவணை பொலிஸ் பிரிவு

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டப் பகுதியில் இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் செவ்வாய்க்கிழமை (09) ஏற்பட்ட தகராறு பின்னர் கத்திக்குத்தாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய அலாவுதீன் ரிஷாத் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்தவருக்கும் அவருடைய முன் வீட்டில் வசித்து வந்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் தகராறாக மாறியதில் கூறிய ஆயுதங்களினால் ஒருவரை ஒருவர் தாக்கியதில் அலாவுதீன் ரிஷாத் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட விசேட தடயவியல் பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஏ.எல்.எம்.ஷினாஸ்

