News
நகர அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு முன்னாள் பணிப்பாளர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு முன்னாள் பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



