News

பிரிந்த காதலியின் மீது கோபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தச் சென்ற காதலன், அவரது முகத்தை பார்த்து பரிதாபப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்ற சம்பவம் இலங்கையில் பதிவு

தனது பிரிந்த காதலியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சென்ற காதலன், அவரது முகத்தை பார்த்து பரிதாபப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்ற சம்பவமொன்று கோவிந்தபுர பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம், கோவிந்துபுர பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட புத்தம ரிதிகஹவத்தே பகுதியில், கடந்த 11 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.

புத்தம ரிதிகஹவத்தயைச் சேர்ந்த 24 வயது பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனுடன் உறவில் இருந்ததாகவும், இருவரும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து விட்டதாகவும் கோவிந்தபுரம் பொலிஸ் தெரிவித்துள்ளது.

அந்த பெண், தற்போது மொனராகலை நகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். அவர் வேறொரு இளைஞனுடன் உறவில் இருப்பதாக கேள்விப்பட்ட அவரது முன்னாள் காதலன், அப்பெண்ணின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டார்.

அந்த பெண், வீதியைக் கடந்து ஆடைத் தொழிற்சாலையில் பேருந்தை பிடிக்க தனது வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்த போது, அவளை சுட முயன்றார். அவரது முகத்தை பார்த்து பரிதாபப்பட்டு, பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.

கோவிந்தபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி   டி.எம். கருணா சாந்த, அவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button