News

21 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை இரு கால்களின் காலுறைகளுக்குள் மறைத்து வெளியில் கொண்டுவர முயற்சித்த விமான நிலைய ஊழியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் 210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன்  கைது செய்யப்பட்டார்.



குறித்த ஊழியர், 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு கால்களின் காலுறைகளுக்குள் மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் (staff gate) வழியாக கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.



குறித்த 24 கெரட் தங்கத்தின் பெறுமதி 210,524,575.35 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.



விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையின் போது இந்த தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சுங்கம் மேலும் தெரிவித்தது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button